சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது 25 லட்சம் பேர் திரண்டனர். இப்போது அந்தக் கட்சியே இல்லை-வேல்முருகன்

கட்சி தொடங்குபவர்கள் வெற்றியோ? தோல்வியோ? மக்களுக்கான போராட்டக் களத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்க்கு கூட்டம் கூடுவது என்பது இயல்பான ஒன்று. ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது 25 லட்சம் பேர் திரண்டனர். இப்போது அந்தக் கட்சியே இல்லை என்றார்.
Tags : சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது 25 லட்சம் பேர் திரண்டனர். இப்போது அந்தக் கட்சியே இல்லை-வேல்முருகன்