கிணற்றில் விழுந்து சிறுமி பலி.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் அடுத்த உமையாள் பரணஞ்சேரி கிராமத்தில், குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் குஷிகுமாரி, 11.வீட்டின் அருகே விவசாய நிலத்தில், தரையொட்டிய நிலையில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் தவறி விழுந்து பலியானார்.
ஒரகடம் போலீசார் சிறுமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :