தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன - தொல். திருமாவளவன்  குற்றச்சாட்டு 

by Editor / 21-08-2023 08:30:59am
தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன - தொல். திருமாவளவன்  குற்றச்சாட்டு 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் லட்சுமிபுரத்தினை சேர்ந்த 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் என்பவர் தாக்குதலுக்குள்ளாகி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஹரிபிரசாத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,, நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். நடந்த விபரங்களை கேட்டுக் கொண்டார்.
.கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல் . திருமாவளவன் 
செய்தியாளர்களிடம் பேசுகையில் :பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுகின்ற மனபங்கு வளர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.இது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்,அண்மை காலமாக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்போது மாணவர்களிடை பரவி வருகிறது.எனவே பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவர் ஹரி பிரசாத் மீது போடப்பட்டுள்ள வழக்கை மறு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்ய வேண்டும்.வழக்கமாக தலித்துக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் கவுண்டர் வழக்கு என்பது எல்லா மாவட்டங்களிலும் பின்பற்றி வரக்கூடிய நடைமுறையாக உள்ளது.கல்வி நிறுவனங்களில்  பெயர்கள் ஜாதி அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்ற கருத்து வரவேற்கக் கூடியது.அது மட்டுமே மாணவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுகிறது என்பதை கருதி விட முடியாது. 

நிறைய ஜாதிய,  மதவாத அமைப்புகள் மாணவர்கள் இடையே ஊடுருவி ,, அவர்களின் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை பாய்ச்சிகின்றனர்,சாதி உணர்வினை தூண்டுகிறார்கள்.

இந்தியா முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளில் சாங் பரிவார அமைப்பு திட்டமிட்டு மதவெறி அரசியலை விதைப்பதை ஜனநாயக சக்திகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். கண்டித்து வருகிறார்கள்

அதேபோன்று சாதியவாத அமைப்புகள் மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளை கட்டுவதும்,, அவர்கள் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் இருசக்கர வாகனங்களில் ஜாதியை முத்திரைகளை பதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஜாதி உணர்வினை தூண்டும் வகையில் சில ஜாதியவாத அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்,சுய சாதி பெருமை என்கிற பேரில் ஜாதி உணர்வு தூண்டப்படுகிறது.இதனை சமூக வலைதளங்களில் பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனுடைய தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்
ஆகவே இது போன்ற நச்சு பரப்புரைகளை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது,  சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எனவே குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பு மட்டுமே இதற்கு பொறுப்பு என்று சொல்ல முடியாது,ஒட்டுமொத்தத்தில் சமூகத்தில் ஜாதியவாத,  மதவாத சக்திகள் பரவலாக தலை தூக்கி உள்ளனர்.
அவர்கள் திட்டமிட்டு பரப்புகின்ற வெறுப்பு அரசியல் தான் இது போன்ற நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதனை உணர முடிகிறது.

எனவே தான் நீதிபதி சந்துரு தலைமையான ஆணையம் நான்குநேரி சம்பவத்துடன் நின்று விடாமல் தமிழகம் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் ,, அதுபோல அரசு , தனியார் கல்லூரி வளாகங்களில் நிலவுகின்ற ஜாதிய வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்ய வேண்டும் , 

அந்த ஆய்வுக் களத்தை விரிவு படுத்த வேண்டும் , அதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
பள்ளி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்  சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுபோன்று சம்பவம் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு, குறிப்பாக காவல்துறைக்கு உள்ளது,
காவல்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது,
இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இதில் செயல்படக் கூடாது.
உண்மையில் சாதி வன்மத்தோடு செயல்படுகின்றவர்களை ,, வன்முறையை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும்,
 என்றார்

 

Tags : தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை - தொல். திருமாவளவன்  குற்றச்சாட்டு 

Share via