தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை

by Editor / 02-10-2021 11:15:24am
தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 368க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 34 ஆயிரத்து 944க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்துள்ளது. கிராமிற்கு தங்கம் ரூ.15 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 387க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.152 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 096க்கு விற்கப்படுகிறது.

சவரன் தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 751க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 8க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo