மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கி

மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் காலை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குப்பைதொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். துப்பாக்கியை கைபற்றிய போலீசார் சட்டவிரோதமாக துப்பாக்கியை சிறைக்குள் கொண்டு செல்ல முயற்சி நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :