அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைச்சர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

by Editor / 02-08-2022 02:53:45pm
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைச்சர் அதிகாரிகள் நேரில் ஆய்வு


 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அருகே கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து நான்கு மாதத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. கீழக்கரை கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இந்த ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஏற்கனவே கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via

More stories