நாட்டிலே குப்பைக்கு வரி போடுகிற அரசு திமுக அரசு-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு:

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுபயணத்தில் தென்காசியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு:
தென்காசி மாவட்டமானது விவசாய பகுதிகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதி மக்களின் பொருளாதார ஆதாரமாக விளங்குவது விவசாயம். அப்படிப்பட்ட விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனால் ஒரு திட்டத்தை கூட விவசாயிகளுக்கு திமுக அரசு கொண்டு வரவில்லை.தமிழகம் தற்போது போதை பொருள் அதிகம் புழங்கும் மாநிலமாக உள்ளது. இந்த போதைக்கு அடிமையாகி மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு தீய விளைவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது.அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன், திமுக அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும்.46 பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு என்கிற பெயரில் ஊர் ஊராக தற்போது முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 1/2 வருடமாக 46 பிரச்சினைகளை தீர்க்காமல் தேர்தல் நேரத்தில் இப்போது ஏன் தீர்க்க வேண்டும். நாட்டிலே குப்பைக்கு வரி போடுகிற அரசு திமுக அரசு தான். இப்படி பல்வேறு வரிகளை உயர்த்தி மக்களை மிகவும் திமுக அரசு கஷ்டப்படுத்தி வருகிறது.திமுக கட்சி கூட்டணியை மட்டும் நம்பி இருக்கிறது. ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது.தென்காசியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதியினை திமுகவினர் கொடுத்த நிலையில் ஒரு திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை.வீட்டு மனைகள் இல்லாத ஏழை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடவசதியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்.அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படும்.
Tags : எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: