காங்கிரஸ் நடத்தும் மவுன சத்தியாகிரகப் போராட்டம்

by Staff / 10-07-2023 05:19:29pm
காங்கிரஸ் நடத்தும் மவுன சத்தியாகிரகப் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஜூலை 12 ஆம் தேதி அன்று மவுன சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவுள்ளது. ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மவுன சத்தியாகிரகப் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக கட்சி தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்ன தந்திரங்களை கையாண்டாலும், மக்களுக்காகவும், மோடி அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் நிற்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.
 

Tags :

Share via