குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழா.

by Editor / 13-01-2025 09:45:01am
 குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழா.

பஞ்ச சபைகளுள் ஒன்றான  குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழாவில் இன்று  காலை நடராஜபெருமானுக்கு  ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.
  குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் தேதி சித்திர சபையில் வைத்து நடராஜ பெருமானுக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. விழாவில் முக்கிய திருவிழாவான இன்று காலை கட்டளைதாரர் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், தொடர்ந்து  5.25 மணிக்கு கோவில்  திரிகூட மண்டபத்தில் வைத்து நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடந்தது. முன்னதாக பல்வேறு நறுமண பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

 

Tags :  குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழா

Share via