பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மூவர் கைது

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் குடிநீரில், பூச்சி மருந்து கலந்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சாகர் பாட்டில், கிருஷ்ணா மதார் மற்றும் மகன்கவுடா பாட்டில் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ள இஸ்லாமியரை இந்த விவகாரத்தில் சிக்க வைப்பதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
Tags :