மாணவர் மர்ம மரணம்.. நீதி கேட்டு பெற்றோர் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியில் பூட்டிருந்த கிணற்றில் மாணவர் முகிலன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர் விடுதியில் தடய அறிவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உயிரழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, உறவினர்கள் ஆட்சியர் அலுவலத்தை நோக்கிச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Tags :