ஒரு இந்தியர் இப்படி பேச மாட்டார் - ராகுலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
கடந்த 2023-ம் ஆண்டு 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்றது. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "சீனா 2,000 சதுர அடி நிலத்தை கைப்பற்றி, 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்" என பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, லக்னோ நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, ராகுல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், "ஒரு இந்தியராக இருந்தால், இப்படி பேச மாட்டீர்கள்" என கண்டித்துள்ளது.
Tags :



















