அயோத்தி ராமருக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகள்

by Staff / 23-01-2024 04:30:12pm
அயோத்தி ராமருக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகள்

வைரம், முத்து, மாணிக்கம், வைர கற்கள் பதித்த தங்க கிரீடம் அதோடு இணைந்த காதணிகள். நெற்றியில் வைரம், மாணிக்கக்கற்களுடன் கூடிய திலகம். கழுத்தில் விஜயந்தி, கந்தா, படிக நெக்லஸ்கள். இடுப்பில் முத்து, வைரம், மாணிக்கம், மரகத கற்கள் பதித்த தங்க பட்டை. இடது கையில் முத்து, மாணிக்கம், மரகதக்கற்கள் பதித்த வில். வலது கையில் தங்க அம்பு. இரு கைகளிலும் வைரங்கள் பதித்த வளையல், தங்க பட்டையில் ரத்தினங்கள் பதித்த கவசம், முத்துப்பதித்த மோதிரங்கள். மார்பில் வைரம், மாணிக்கக்கற்களால் செய்யப்பட்ட கவுஸ்துப மணி. 5 வயது பால ராமர் முன் வெள்ளியால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை அணிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories