மலேசியாவில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ. 36. 20 லட்சம் திப்புடையநகைகள்,பறிமுதல்

by Staff / 08-03-2023 03:55:58pm
மலேசியாவில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ. 36. 20 லட்சம் திப்புடையநகைகள்,பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ. 36. 20 லட்சம் மதிப்புடைய 740 கிராம் தங்க நகைகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். தங்க நகைகளை ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த, மலேசிய நாட்டு பெண் பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை.மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர்.அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில்கள், சுங்க அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.இதை அடுத்து அந்தப் பயணியின் உடமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், பெண் சுங்க அதிகாரிகள் மலேசிய பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அவருடைய ஆடைக்குள் தங்க நகைகள், மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கச் செயின்கள், வளையல்கள் உட்பட தங்க ஆபரணங்கள் 740 கிராம் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 36. 20 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் மலேசியப் பெண் பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via