லாக்டவுன் காலத்தில் 46 சிறுமிகள் கர்ப்பம்
கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. லாக்டவுன் காலத்தில் குழந்தைகளே அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது. 2020ஆம் ஆண்டில், மாநிலத்தில் 3056 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021ல் 3559 ஆகவும், 2022ல் 4586 ஆகவும் அதிகரித்தது. லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர். அவர்களில் 23 பேர் குழந்தை பெற்றனர். லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது அதிகமான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது.
Tags :