வட மாநில தொழிலாளர்களுடன் குளச்சல் டி. எஸ். பி. சந்திப்பு

by Staff / 08-03-2023 05:06:42pm
 வட மாநில தொழிலாளர்களுடன் குளச்சல் டி. எஸ். பி. சந்திப்பு

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலையத் தளங்களில் சிலரால் பகரப்பட்டன. இது வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. இது சம்பந்தமாக அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் சந்தித்து அச்சுறுத்தல் உள்ளதா? என்பது பற்றி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குளச்சல் டி. எஸ். பி. தங்கராமன் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகத்தில் வேலை செய்யும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்தார். அவர்களிடம் சமூக வலையத் தளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும், இதை வெளியிட்டவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் வாட்சப் போன்ற சமூக வலையத் தளங்களில் பரவும்போது அதுபற்றிய உண்மைத்தன்மையை பற்றி தெரிந்தபின்பே மற்றவர்களுக்கு பகிர வேண்டுமெனவும், தேவையற்ற பயம் வேண்டாம் எனவும், யாராவது தங்களை அச்சுறுத்துகின்றனரா? என்பதையும் கேட்டறிந்தார். அவ்வாறு யாராவது அச்சுறுத்தினால் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனிலோ, எஸ். ஐ. யிடமோ, மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டரிடமோ அல்லது குளச்சல் டி. எஸ். பி. யாகிய என்னிடமோ புகார் தெரிவிக்கலாம். யார், யாரை பற்றி புகார் கூறினார் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். இதுசம்பந்தமான நோட்டீசும் விநியோகிக்கப்பட்டது. இதில் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வெள்ளிச்சந்தை எஸ். ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via