இன்று சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு

by Admin / 29-12-2025 10:06:19am
இன்று சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு

இன்று சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு- செயல் குழு கூட்டம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு விதி 15 ,16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்த கூட்டமும் பொதுக் குழு வால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியரால்கூ ட்டப்பட்டு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும். சென்னைஉயர் நீதிமன்றத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்பு மணிராமதாஸ் l கட்சியின் தலைவர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் கூட்டுவது சட்டவிரோதம் என்றும் இது பா.ம.கவின் அதிகாரப்பூர்வமான கூட்டம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.

 

Tags :

Share via