முழுமையாக தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி அமெரிக்கா அறிவிப்பு

by Editor / 16-10-2021 03:46:45pm
 முழுமையாக தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி அமெரிக்கா அறிவிப்பு


கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் நவம்பர் 8- ந்தேதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


கொரோனா பரவலை தொடர்ந்து தற்போதைய விதிகளின்படி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி புதிய பயணக் கொள்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டது. அதன்படி, அமெரிக்கா அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்க பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் அந்நாட்டுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையின் உதவி ஊடகச் செயலர் கெவின் முனோஸ் சுட்டுரையில் பதிவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டவர்களின் அத்தியாவசமற்ற பயணங்களுக்கு 18 மாதங்களாக இருந்த தடையை நவம்பர் 8 ந்தேதி முதல் விலக்குகிறது அமெரிக்கா. முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாட்டினர் விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்து மூலம் அமெரிக்காவுக்கு வருகை தரலாம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via