பாஜக எம்.எல்.ஏ.மீது தாக்குதல்.தடியடி-பதட்டம்.

by Editor / 21-11-2022 09:28:13pm
பாஜக எம்.எல்.ஏ.மீது தாக்குதல்.தடியடி-பதட்டம்.

கர்நாடக மாநிலத்தில் சிக்மளூர் மாவட்டம் குண்டூரில் யானை மிதித்து ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல மூடிவரை தொகுதி எம்எல்ஏ குமாரசாமி கிராமத்திற்கு சென்றார். கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏவின் மேல் சட்டை மற்றும் ஆடைகள் கிழிந்து அவருக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து  க்காவலறிந்துவந்த போலீசார் தடியடிநடத்தி எம்.எல்.ஏ வை பொதுமக்களிடமிருந்து மீட்டுள்ளனர்.
கல்வீச்சுக்கு இடையே, எம். எல். ஏ. ,வை போலீசார் மீட்டு, அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
மேலும், கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.எம். எல். ஏ. குமாரசாமியை சூழ்ந்து கொண்ட கும்பலை அடக்க போலீசார் தடியடி நடத்தினர்.மேலும் யானைதாக்கியதில் உயிரிழந்த உள்ளூர் பெண் ஷோபாவின் இறுதி சடங்குகள் இன்னும் நடத்தப்படவில்லை அந்த கிராமத்தில் இன்னும் பதட்டமான சூழலே நிலவி வருகிறது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ.மீது தாக்குதல்.தடியடி-பதட்டம்.
 

Tags :

Share via

More stories

Logo