யானைகள் நடமாட்டம்; சுருளி அருவியில் குளிக்கத் தடை

by Editor / 02-08-2023 04:54:43pm
யானைகள் நடமாட்டம்; சுருளி அருவியில் குளிக்கத் தடை

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகம் இருக்கும். இந்நிலையில் இன்று காலை அருவி வளாகத்தில் காட்டு யானைகள் நிற்பதைக் கண்ட ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மக்கள் குளிக்க அனுமதி கிடையாது என வனச்சரகர் பிச்சைமணி கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo