இன்று பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி சுற்றுலா பயணம்

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அதிகாரிகள் பிரான்ஸ் அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனர். அதன்பிறகு, ஜெய்ப்பூரில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு மோடியுடன் மக்ரோன் செல்லவுள்ளார். இந்த பயணத்திற்கு பிறகு, நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மக்ரோன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
Tags :