சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரி இரண்டு மனு தாக்கல்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி ஊழல் புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார். அதனையடுத்து இன்று விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை காரணம் காட்டி ஒரு மனுவும், வீட்டிலேயே இருப்பதாக கூறி மற்றொரு மனுவும் என ஜாமின் கோரி இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
Tags : சந்திரபாபு நாயுடு ஜாமின்