காஷ்மீரில் இருவேறு பகுதிகளை தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மரணம்

by Staff / 22-04-2022 03:00:48pm
காஷ்மீரில் இருவேறு பகுதிகளை தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் மரணம்

நாளை மறுநாள் பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் இருவேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர்.சாத்தா முகாமில் இருந்து துணை ராணுவப்படை வீரர்கள் 15 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ பேருந்து மீது அதிகாலை நாலரை மணி அளவில் தீவிரவாதிகள் தாக்குதலை நிகழ்த்தினர். துணை ராணுவ படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் இதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர் மற்றொரு சம்பவத்தில் சுன்ஜவான்இராணுவ முகாம் அருகே அதிகாலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு கட்டிடத்திலிருந்து பதுங்கி இருந்த தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via

More stories