காதலிக்கு திருமணம்.. காதலன் கொடூர கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் காதலிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், காதலன் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்த நிலையில், பெண்ணுக்கு வேறொரு இடத்தில் நாளை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில் மாரியப்பன் விளாத்திகுளம் கழுத்தறுத்து மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :