9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்

by Staff / 20-08-2023 12:17:53pm
9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பதிவில், லடாக்கில் எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில், ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மிகுந்த துயரமான இந்நேரத்தில் என் எண்ணங்கள் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை நினைக்கிறது. விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo