மதுபான கடையை திறக்க வேண்டும் --- என மது பிரியர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

by Editor / 05-05-2025 03:52:45pm
மதுபான கடையை திறக்க வேண்டும் --- என மது பிரியர் ஆட்சியர்  அலுவலகத்தில் கோரிக்கை மனு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர் மனோகரன் என்பவர் தங்கள் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடம் ஆதரவை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அழைத்துள்ளார்.

இந்த கோரிக்கை மனுவில் தங்கள் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கும், கல்லூரி மற்றும் பள்ளி என யாருக்கும் எந்தவித இடையூறும் கிடையாது. இந்த மதுபான கடையானது சாலையிலிருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதியில் இயங்கி வருவதால்  எந்த வித விபத்துகளும் ஏற்பட்டது கிடையாது. இவ்வாறு எந்தவித இடையூறும் இல்லாத மதுபான கடையை அதே பகுதியில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்துள்ளார்.
மது பிரியர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடையை மூடக்கூடாது என மனு அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : மதுபான கடையை திறக்க வேண்டும் --- என மது பிரியர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

Share via