நிர்வாணமாக்கி சித்திரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை!

ராஜஸ்தானில் பிரதாப்கர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி, நிர்வாணமாக்கி கிராமத்தில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடத்தி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து கணவர், உறவினர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்குவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த மகள் மிகுந்த தைரியம் கொண்டவர். இந்த வேதனையான நேரத்திலும் அவர் மிகுந்த தைரியத்துடன் போராடியிருக்கிறார் என கூறியுள்ளார்.
Tags :