குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்.

by Staff / 11-01-2023 04:55:21pm
குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் இந்திரா நகரில் தனபாக்கியம் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.இதனையடுத்து தீப்பொறி குடிசை வீட்டில் பட்டு மல மலவென தீ வீடு முழுவதும் பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. அருகில் இருந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர் மேலும் தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் அரைமணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்.
 

Tags :

Share via

More stories