இந்திய ரயில்வேயில் 7124 பணிக்கான தேர்வு 111 நகரங்களில் 156 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

by Editor / 13-05-2022 09:03:49am
இந்திய ரயில்வேயில் 7124 பணிக்கான தேர்வு 111 நகரங்களில் 156 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்திய ரயில்வேயில் 7124 நிலைய அதிகாரிகள் பணிகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் மே 9 அன்று இரண்டாவது கட்ட கணிப்பொறி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 25 மாநிலங்களில் 111 நகரங்களில் 156 தேர்வு மையங்களில் நடைபெற்றது.  இந்தியா முழுவதும் முதற்கட்ட தேர்வில் தேர்வான 1,80,882 விண்ணப்பதாரர்களில் 1,28,708 பேர் கலந்து கொண்டனர். தெற்கு ரயில்வேக்கான பணியாளர்களை தேர்வு செய்ய, இந்த இரண்டாம் கட்ட தேர்வை சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே தேர்வாணையங்கள்  முன்னின்று நடத்தின. சென்னை ரயில்வே தேர்வாணயத்திற்கான 12,028 விண்ணப்பதாரர்களில் 9,107 பேர் தேர்வுகளில் பங்கேற்றனர். இதன் மூலம் 75.7 சதவீத விண்ணப்பதாரர்கள் தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர். திருவனந்தபுரம் ரயில்வே தேர்வாணயத்திற்கான 6,657 விண்ணப்பதாரர்களில் 4,420 பேர் தேர்வுகளில் பங்கேற்றனர். இதன் மூலம் 63.4 சதவீத விண்ணப்பதாரர்கள் தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர். முதல்முறையாக விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அடையாள  சோதனை மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டாம் கட்ட தேர்வுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன.

 

Tags : Selection for 7124 posts in Indian Railways was held at 156 examination centers in 111 cities.

Share via