சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி

by Staff / 27-05-2024 01:22:26pm
சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி

கோவயைச் சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா (32) ஒரு மாத கால மருத்துவ பயிற்சிக்காக சமீபத்தில் சென்னைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி வகுப்புகளுக்குச் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று (மே 27) அந்த பெண் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். சார்ஜரை கையில் பிடித்தபடியே அவர் இறந்து கிடந்துள்ளார். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo