அடுத்த ஆண்டு வரை இயக்கப்படும்சிறப்பு ரெயில்கள்

by Editor / 09-10-2021 03:59:00pm
அடுத்த ஆண்டு வரை இயக்கப்படும்சிறப்பு ரெயில்கள்

திருநெல்வேலி - பிலாஸ்பூர் மற்றும் ஒருசில சிறப்பு ரெயில்கள் அடுத்த அடுத்த ஆண்டு வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி - பிலாஸ்பூர், மதுரை - பிகானீர், மதுரை வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஓகா, மதுரை திண்டுக்கல் மற்றும் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரெயில்கள் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரெயில்களின் சேவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதன்படி வண்டி எண் 06070 திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 30ந் தேதி வரையும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரெயில் சேவை பிப்ரவரி 1ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல வண்டி எண் 06733 ராமேஸ்வரம் - ஓகா சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 28ந் தேதி வரையும் வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவை பிப்ரவரி 1ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


மேலும் வண்டி எண் 06053 மதுரை - பிகானீர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 27 வரையும் வண்டி எண் 06054 பிகானீர் - மதுரை சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 30ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 26ந் தேதி வரையும் வண்டி எண் 06071 தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 27ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via