தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

by Staff / 31-12-2022 02:52:08pm
தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ‘ஆண்டொன்று போனால் - வயதொன்று கூடும் என்பறு வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்பதுதான் வாழ்க்கை. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி, எழுச்சி கொண்ட ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையைல் நாம் மாற்றிக் காட்டினோம். அடுத்த ஆண்டில் உங்கள் ஒவ்வொருவருடைய சமூக - பொருளாதார வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம்’ என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories