இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்

by Staff / 03-11-2023 11:45:51am
இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்

காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) காஸாவில் நடந்த போரில் உயிரிழந்தார். 'மினி இந்தியா' என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த சாலமன், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த தாக்குதலில் படுகாயமுற்று அவர் உயிரிழந்துள்ளார். சாலமன் மறைவுக்கு டிமோனா மேயர் பென்னி பிட்டன், நகர மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via