இந்திய முஸ்லிம் லீக் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுமாறு திமுக தரப்பு தொிவித்துள்ளது-தேசிய தலைவர் காதர் மொய்தீன்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் முதற்கட்ட தொகுதி பங்கெட்டு பேச்சுவார்த்தை என்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இந்திய முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலானகுழுவினர் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் தொிவிக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் தங்களுக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காதர் மொய்தீன் இந்த தேர்தலில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் அஞ்சு தொகுதிகள் சாத்தியமில்லை எனில் குறைந்தபட்சம் நாலு தொகுதிகளாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தம் கருத்தை வெளியிட்டு உள்ளார். தொகுதி எண்ணிக்கை குறித்த இறுதி முடிவு அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் என்றும் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் திமுக கூட்டணியிலே தாங்கள் நீடிப்போம் என்றும் காதலும் மொய்தின் உறுதிப்பட தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையிலேயே வெயில்மற்றும் நோன்பின் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. இந்நிலையில் .அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அங்கு நலமுடன் இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.
Tags :



















