ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா

by Editor / 08-01-2022 08:51:53pm
ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  இக்கோயிலில் ஆண்டுதோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு தை தெப்ப திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு  கொடியேற்றப்பட்டது.தமிழக அரசு வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்த நிலையில் பக்தர்கள் இன்றி கொயேற்றம் நடைபெற்றது.
07.01.2022 துவங்கிய  இந்த தை தெப்ப திருவிழா 12 நாட்கள் நடைப்பெறும் 12 நாட்களும் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரத்தில்  அருள்பாலிப்பார் இரண்டாம் நாள் உற்சவத்தில் ஸ்வாமி வெள்ளி மஞ்சத்திலும்  அம்மன் கிளி வாகனத்திலும் எழுந்தருளி பிரகார உள்வீதி உலா வந்தனர்.

ஆண்டுதோறும் தை தெப்ப உற்சவத்தன்று மாலை திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவார்கள். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.


 

 

Tags :

Share via