அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - முகமது ரியாஸ்

by Staff / 13-02-2023 01:34:00pm
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - முகமது ரியாஸ்

ஒட்டுமொத்த கேரள மக்களையும் அமித் ஷா அவமதிக்கிறார் என்று கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முஹம்மது ரியாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கேரளா பாதுகாப்பாக இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் மறைமுகமாக கூறியதற்கு அவர் பதிலளித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிப்பதாகவும் அவர் கூறினார். 'கேரளா உண்மையில் நாட்டிற்கு மத நல்லிணக்கத்தின் முன்மாதிரியாக சுட்டிக்காட்டக்கூடிய மாநிலம். கேரளாவை அவமானப்படுத்துவது கேரள மக்களை அவமானப்படுத்துவதாகும். அமித்ஷா தனது கருத்தை திருத்திக்கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories