இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

by Admin / 13-08-2023 09:29:17am
இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுக்கும் இடையிலான நான்காவது போட்டி அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் லாடர் ஹில் நகரில் நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது ..20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு மேற்கிந்திய தீவுகள் அணி 178 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட களம்புகுந்த இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 179 ரகளை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு வெற்றியும் இந்திய அணி 2 வெற்றியும் பெற்று சம நிலையில் உள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்து வெற்றியை தீர்மானிக்க இயலும்.இதே களத்தில் இரு அணிகளும்இன்று இரவு எட்டு மணிக்கு மோதுகின்றன.

இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 

Tags :

Share via
Logo