கும்பகோணம் தீ விபத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம்
கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஜூலை 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர சம்பவத்தின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் 7 முதல் 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும்போது பரவிய தீயால் இந்த கோர விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :



















