எடப்பாடிக்கு நெருக்கடி.. பிரேமலதா கொடுக்கும் குடைச்சல்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படவில்லை என்றதும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு வழங்குவதாக அதிமுக கூறிவிட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள தேமுதிக, சீட் தருவதாகச் சொன்ன கடிதத்தை வெளியிட்டால் என்னவாகும் தெரியுமா? என ஓப்பனாகவே மிரட்டி வருகிறது.
Tags :



















