தந்தையை கொல்ல திட்டமிட்ட 16 வயது மகள்

by Staff / 29-08-2023 12:47:59pm
தந்தையை கொல்ல திட்டமிட்ட 16 வயது மகள்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வேணுகோபால் பாண்டியன் (55). இவரை நேற்று வழிமறித்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் தெரியவந்துள்ளது. இவரது 16 வயதான மகள், முத்துக்காமாட்சி என்ற ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு இவரது மகளும் உடந்தையாக இருந்துள்ளார். அதனடிப்படையில் சிறுமி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags :

Share via