பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 10 மாணவர்கள் படுகாயம்

by Staff / 29-08-2023 12:43:27pm
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 10 மாணவர்கள் படுகாயம்

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் அருகே வேனை நிறுத்தி ஓட்டுநர் பார்த்திபன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் கியரில் கைவைத்தவுடன் வேன் பின்பக்கம் சென்று வாய்க்காலில் கவிழ்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories