போதையில் தற்கொலை முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரில் மது அருந்த பணம் தராததால் மது பிரியர் மின்கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். இந்நிலையில், தந்தை பணம் தர மறுத்ததால், உயர் அழுத்த மின்கம்பியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் இணைப்பைத் துண்டித்து, மது பிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கீழே இறக்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Tags :