ஏற்காட்டில் ஆலங்கட்டி மழை

by Staff / 24-04-2023 05:27:46pm
ஏற்காட்டில் ஆலங்கட்டி மழை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஒரு  வார காலமாக வெயில் அதிகம் கொளுத்தி வந்தது.

 இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மாலை நேரத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.

 ஏற்காடு மற்றும் நாகலூர், செம்மநத்தம் ஆகிய ஊர்களில் மழை பெய்து வந்தது .

இந்த நிலையில் இன்று காலை ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார் பகுதியில் கடும் வெயில் அடிந்தது.
  இந்த நிலையில் இன்று மாலை திடீரென ஆலங்கட்டி மழையும் பெய்தது.

 ஏற்காட்டில் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo