ஜீ ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை

by Editor / 24-04-2023 07:20:01pm
 ஜீ ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள ஜீ ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பத்தாண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத்துறையில் மிகச் சிறந்த நிறுவனமாக இருக்கிறோம். தங்கள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது. தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்ப வைக்கும் படி ஜோடிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தியதாகவும், அதிக வருமானம் ஈட்டியதாகவும் தவறான பல கட்டமைப்புகளை உருவாக்கி யுள்ளார். பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலையின் செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. படித்த மரியாதைக்குரிய தலைவர் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் நம்பும் ஆபத்து இருக்கிறது' என விளக்கம் அளித்துள்ளது ஜீ ஸ்கொயர் நிறுவனம்.

 

Tags :

Share via

More stories

Logo