சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  முரளிதர் ,கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.  

by Admin / 30-09-2022 08:15:15pm
 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  முரளிதர் ,கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.  

செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ் முரளிதர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
 
ஒரிசா உயர்நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக 2021 ஜனவரி 4 அன்று, நீதிபதி முகமது ரபீக்கிற்குப் பிறகு முரளிதர் பதவியேற்றார். சென்னையின் அடுத்த தலைமை நீதிபதியாக முரளிதர் பதவியேற்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெற்றதால் அந்த பதவி காலியாக உள்ளது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பின்பு அவர் பதவியேற்பாா்.புதிய தலைமைநீதிபதி தமிழகத்தை சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories