முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா போஸ்டர்கள் கிழிப்பு.-போலீசில் புகார்.

by Editor / 28-02-2023 07:38:35am
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா போஸ்டர்கள் கிழிப்பு.-போலீசில் புகார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகாலமாக திமுக ஆட்சியில்லாமல் அதிமுகவின் ஆட்சி இருந்த காலக்கட்டத்திலும் திமுகவில் கோஷ்டி பூசல் இருந்துவந்தது.அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் வேறுபாடின்றி ஒரே நோக்கத்தோடு தமையலகத்தில் திமுக ஆட்சி மலரவேண்டுமென களம்கண்டு அக்கட்சிவெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது..அன்றிலிருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் வெகு தீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது.இந்த நிலை உள்ளாட்சித்தேர்தலிலும் நகராட்சி,பேரூராட்சிமன்றத்தேர்தல்களிலும் தலைதூக்கி உள்ளடி வெளிகளில் பல உண்மையான கட்சி தொண்டர்கள் காலத்தில் தோல்வியை தழுவினர் ,கட்சிக்குஉழைக்காதவர்கள் வெற்றிபெற்று உள்ளாட்சி பதவிகளை தக்கவைத்துக்கொண்டு கட்சியின் பொறுப்பாளர்களை உதாசீனப்படுத்தும் நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக நடந்துவருகின்றது.இந்த நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா நாளை  கொண்டாடப்பட இருக்கும் நிலையில் குளச்சல் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த தலைமை கழக வாழ்த்து போஸ்டர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற நிலையில் சம்பவம் அறிந்து திரண்ட திமுக வினர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via