சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 01-04-2023 02:24:27pm
சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம். பி. பதவி பறிப்பை கண்டித்து சாத்தான்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராவணன், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்தர், நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo