ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்-பிரியங்கா காந்தி

எனது சகோதரனின் உண்மையை கண்டு அஞ்சும் பிரதமர் மோடி ஒரு கோழை என பிரியங்கா காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பிரியங்கா காந்தி, “தியாகியின் மகனான என் சகோதரனை துரோகி, மீர் ஜாபர் என்று சொல்கிறீர்கள். என் சகோதரன் ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். அவர் ஒரு கோழை, இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என பிரியங்கா காந்தி ஆவேசமாக கூறினார்.
Tags :