நாளை மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை..!

by Editor / 26-03-2023 11:38:15pm
நாளை மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதனையடுத்து, சனி, ஞாயிறு விடுமுறையை அடுத்து நாளைமீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இதில் 1 மணிநேரம் கேள்வி- பதில் எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எம்எல்ஏக்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via