இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவுவதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலையிலிருந்து மின்சாரம் சீராக
விநியோகிகப்படுவதாகத்தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதிமு.க.ஸ்டாலின்அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
Tags :